வங்கத்தின் தைரியமிக்க பெண் தலைவர் என அறியப்படுபவர் மம்தா பானர்ஜி. எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க வைப்பார் என்றும் மம்தா பற்றி ஒரு கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் வழக்கமாக இரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் மம்தா பானர்ஜி வரும் சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

நந்திகிராம், பபானிபூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன் என மம்தா அறிவித்துள்ளது மேற்கு வங்க அரசியலில் அவருக்கு எதிரான கருத்துக்களை ஏற்படுத்தியிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி பெரிய கட்சியான காங்கிரசையும், ஆளும் கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் ஓரங்கட்டி வெற்றிக்கொடி நாட்டியவர். வங்க மண்ணில் பா.ஜ.க ஒருபோதும் துளிர்விட முடியாது என வீர வசனம் பேசியவர். இந்த நிலையில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் அவரது முடிவு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் மம்தா பானர்ஜிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுவிட்டதாக மீம்ஸ்கள் பறக்கின்றன.