தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன்.ரன் படம் வெற்றி பெற்ற பின்னர் அதே போன்று மாஸ் ஹீரோ சப்ஜெட்டில் பல படங்களில் நடித்து வந்தாலும் தமிழ் சினிமா அவரை பெரிதும் கண்டுகொள்ளவில்லை. கடைசியாக மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று மற்றும் விக்ரம் வேதா ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவரை வேற லெவலுக்கு எடுத்து சென்றது.

அதேபோல் சமீபத்தில் மாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் உருவாகி வெளியான சைலன்ஸ் என்கிற படம் அமேசான் இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மாதவன் படம் அமேசான் இணையதளத்தில் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் சார்லி. இந்த படத்தின் தமிழ் ரீமேக் ’மாறா’ என்கிற பெயரில் எடுக்கப்பட்டது இதில் மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது மாறா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. இந்த படம் வருகிற ஜனவரி 8ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.