உத்திரப்பிரதேசத்தில் நடந்த கொடூரம்
உத்திர பிரதேசத்தில் உள்ள சம்பல் மாவட்ட நிர்வாகம் 6 விவசாயிகளுக்கு தலா ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான தனிநபர் பத்திரங்களை சமர்பிக்க சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் பெறப்பட்டுள்ள இந்த 6 விவசாயிகளும் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தங்களது கிராமங்களில் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் ஆவர்.
சிலர் விவசாயிகளை போரட தூண்டுவதால் பொது அமைதிக்கு ஊறு வர வாய்புள்ளதாக காவல்துறையினர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் குற்றவியல் நடைமுறை சட்டம் (CrPc) பிரிவு 111 ன் கீழ் குற்றவியல் நடுவர் 6 விவசாயிகளும் தலா ரூபாய் 50 லடசத்துக்கான தனிநபர் பத்திரங்களை ஏன் சமர்பிக்க கூடாது என கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இந்த தொகை மிகவும் அதிகம் என விவசாயிகள் தெரிவித்ததால் காவல்துறையினர் தொகையை குறைத்து 6 விவசாயிகளும் தலா ரூபாய் 50,000 க்கான தனிநபர் பத்திரங்களை சமர்பிக்க கூறி மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
நாங்கள் அமைதியாக போராட்டம் நடத்துகிறோம், எந்தவித குற்றமும் செய்யவில்லை. அதனால் நாங்கள் இந்த பத்திரங்களை சமர்பிக்க போவதில்லை. காவல்துறையினர் வேண்டுமானால் எங்களை சிறையில் அடைக்கவோ அல்லது தூக்கில் போடவோ செய்யட்டும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்