ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சிகள் தான்
ஒருவரது அதிகரித்த உடல் எடையைக் குறைக்க உதவும் என்பதை நாம் அனைவருமே அறிந்திருப்போம். ஆனாலும் சில பானங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை வேகமாக எரிக்க உதவிசெய்து விரைவில் நம் உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க உதவுகின்றன.
அதிலும் நம்முன்னோர்கள் தொப்பையை மிக எளிதான ஒருவழியிலேயே விரட்டி இருக்கின்றனர். அதாவது வெல்லம் கலந்த எலுமிச்சை ஜூஸ் தான் அந்த சக்தி வாய்ந்த பானம்.
தமிழக கோவில்களில் கூட இன்றும் பானக(ர)ம் என்ற பெயரில் பிரசாதமாக வெல்லம் கலந்த எலுமிச்சை ஜூஸ் வழங்குவதைப் பார்த்திருப்போம்.

சாதாரணமாக எலுமிச்சை ஜூஸ் என்றதும் நாம் அந்த ஜூஸில் சர்க்கரை அல்லது தேனைக் கலந்து குடிப்போம். ஆனால் எலுமிச்சை ஜூஸில் வெல்லத்தைக் கலந்து குடிப்பது ஒரு வித்தியாசமான கல்வை. இது ஒரு வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, உடல் எடையை வேகமாக குறைக்க உதவி புரியும். மேலும் இந்த மாதிரியான வெல்லம் கலந்த எலுமிச்சை ஜூஸ் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு வழங்கக்கூடியவை.அப்புறமென்ன இந்த வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிப்பதை விட்டுவிட்டு நம் பாரம்பர்ய ஜீஸ்க்கு மாறுங்க..உங்க தொப்பைக்கும் குட்பை சொல்லுங்க..