மருத்துவ சோதனைக் கூடங்களில் உருவாக்கப்பட்ட கோழிக்கறி உலகில் முதல் முறையாக சிங்கப்பூரில் உள்ள உணவு கூட்டத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சேர்ந்த ஜஸ்ட் ஈட் என்கிற நிறுவனம் இந்த கோழிக்கறியை தயாரித்து உள்ளது இந்த நிறுவனத்துக்கு ஹாங்காங்கை சேர்ந்த தொழில் அதிபர் லீ கா ஷிங் இந்த முதலீடு செய்துள்ளார்.
இந்த நிறுவனம் கோழியின் செல்களை மட்டும் மருத்துவ சோதனைக் கூடங்களில் வைத்து வளர்த்து கோழிக்கறியை தயாரித்து உள்ளது. இந்தக் கறியை பலகட்ட பரிசோதனைக்கு அனுப்பி பரிசோதித்து அதன் பின்னர் இதனை பயன்படுத்த சிங்கப்பூர் உணவு கழகம் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கோழிகறி விற்பனை நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் இந்த கறியை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் வருகிற சனிக்கிழமை முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த உணவுகளை முதன்முறையாக 13 முதல் 18 வயதுடைய நான்கு மாணவர்கள் சாப்பிட உள்ளார்கள். ஒரு உயிரைக் கொல்லாமல் உருவாக்கப்பட்ட இறைச்சியை முதல்முறையாக இந்த மனித குழு ருசிக்க உள்ளது .இதற்காக நாங்கள் மிகவும் பெருமை படுகிறோம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கோழிக்கறி விற்பனையை தொடர்ந்து மருத்துவ சோதனை கூட்டத்தில் உருவாக்கப்பட்ட பன்றி இறைச்சி விற்க இந்த நிறுவனம் தயாராகி வருகிறது.இதற்கு முன்னர் பீன்சை கொண்டு செயற்கை முட்டையையும் இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.