இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதலாவது டெஸ்ட் உடன் நான் தாயகம் திரும்ப உள்ளேன் பிறகு எஞ்சிய மூன்று போட்டிகளுக்காக கேப்டனாக ரஹானே செயல்பட உள்ளார். எனக்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது இருவரும் இணைந்து சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து இதுவரை விளையாடியுள்ள அது அனைத்து தேவையான நம்பிக்கையையும் அளிக்கிறது. இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் ரஹானே சிறப்பாக பணியாற்றி உள்ளார்.பார்க்க மிகவும் அமைதியாக இருப்பார் ஆனால் அணியின் வலிமை என்ன ஒரு அணிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அவர் நன்றாகவே தெரியும். நாங்கள் எப்போதும் ஒரு அணியாக கூட்டு முயற்சியாக வெளிப்படுத்தும் வகையில் கிரிக்கெட் ஆடி வருகின்றோம். தனிப்பட்ட வீரரை சார்ந்து இதுவரை செயல்பட்டதில்லை நான் இல்லாத சமயத்திலும் அவர் அணியை நன்றாக வழிநடத்தும் ஒரு வீரராகவும் ,கேப்டனாகவும் அருமையாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன்.சமீபத்திய ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து விளையாடி வருகிறோம் கிரிக்கெட் ஆடுவதற்கு அற்புதமான ஒரு இடம் என்றால் அது ஆஸ்திரேலியா தான் நீங்கள் சிறப்பாக செயல்படும் பொழுது அதற்குரிய மரியாதை மக்கள் கண்டிப்பாக உங்களுக்கு தருவார்கள் அவர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும் இவ்வாறு கோலி பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரியா கேப்டன் டிம் பெயன் கூறுகையில் இந்திய வீரர்களை வம்புக்கு இழுக்க வேண்டும் அல்லது ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் நாங்கள் களம் இறங்க மாட்டோம். பேட்டிங்கிலும் ,பந்துவீச்சிலும் எங்களது முழு உத்வேகத்தையும் காட்ட விரும்புகின்றோம் அதுதான் எங்களுடைய முதல் நோக்கம் அதேசமயம் களத்தில் வாக்குவாதம் பிரச்சனை நிகழ்ந்தால் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.இந்த தொடர் முடிந்த பிறகு கேப்டன்ஷிப்பில் எனது எதிர்காலம் குறித்து பேச்சாளர் உடன் ஆலோசித்து முடிவு செய்வேன் என்று அவர் கூறினார்