இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது. இதில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது .ஆசிய அணியின் அறிமுக வீரராக ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இந்த ஆட்டத்தில் இடம்பிடித்துள்ளார். இவர் ஆஸ்திரேலியாவின் 459வது டெஸ்ட் வீரராவார்.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக கூறினார். இதன்படி பிரிதிவி ஷாவும் மையக் அகர்வாலும் இந்தியாவின் ஆட்டத்தைத் தொடங்கினர். மிட்செல் ஸ்டார்க்கின் 2வது பந்திலேயே பிரித்திவி போல்டாகி இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சி அளித்தார். இதன் பின்னர் நம்பிக்கை நட்சத்திரமான புஜாரா களம் இறங்கினார்.

மயக்க அகர்வால் – புஜரா ஜோடி நிதானமாக ஆடினார்கள். ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க், ஹேசில்வுட் ,பேட் கம்மின்ஸ் மூவரும் கூட்டணி போட்டு இந்திய அணிக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர்.பின் பந்து உடைய வேகமும், ஸ்விங்கும் இந்திய பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்தது பத்தாவது ஓவர்களில் தான் முதல் பவுண்டரி எல்லைக் கோட்டுக்கு சென்றது. லெக் ஸ்லிப்பில் இரண்டு முறை கண்டத்தில் இருந்து தப்பினார். சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் பந்துகள் எகிற ஆரம்பித்ததால் ரன் எடுக்கவே மிகவும் சிரமப்பட்டார். இதனால் ரன் ரேட் 2க்கும் கீழாகவே நகரத் தொடங்கியது. ஸ்கோர் 32 ரன்களை எட்டியபோது மயக்க அகர்வால் கம்மின்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேற்றப்பட்டார் .அடுத்ததாக கேப்டன் விராட் கோலி புஜாரா கைகோர்த்தார் 30வது ஓவரில் இந்திய அணி வெறும் 50 ரன்களை எட்டியது.

புஜாராவின் மந்தமான பேட்டிங் கொஞ்சம் டல் அடித்தாலும் அவரது மனம் உறுதிமிக்க நிலையான ஆட்டத்தை கண்டு ஆஸ்திரேலியா பவுலர்கள் வியந்து போனார்கள்.1,2 ரன் விகிதம் மட்டுமே எடுத்து வந்தபோது தான் எதிர்கொண்ட 148வது பதில்தான் முதலாவது பவுண்டரியை எல்லைக் கோட்டுக்கு அனுப்பினார். அதுவும் லயன் ஓவர் களில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை தெரிக்கவிட்ட புஜரா அவரது அடுத்த ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். புஜாரா பந்தை தடுத்து ஆடியபோது அருகில் நின்ற லபுஸ்சேன் பாய்ந்து விழுந்து கேட்ச் செய்தார் லயனின் சூழலில் புஜாரா விக்கெட் பறிபோனது இது பத்தாவது முறையாகும்.
இதன்பின்னர் கேப்டன் விராட் கோலியுடன் துணை கேப்டன் ரஹானே கைகோர்த்தார்.இருவரும் கடினமான எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொண்டனர் .அவசரம் காட்டாமல் பொறுமையாக செயல்பட்டு இருவரும் அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர் .
ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்த இந்திய அணி . இந்த சூழலில் ரஹானே செய்த தவறினால் கோலி ரன்அவுட் செய்யப்பட்டார். மிட் ஆஃப் திசையில் பந்தை அடித்து விட்டு சில அடி தூரம் ஓடிய ரகானே வேண்டாமென்று பின் வாங்கிவிட்டார். அதற்குள் எதிர் முனையில் நின்ற கேப்டன் விராட் கோலி பாதி தூரம் ஓடி வந்து விட்டதால் அவர் திருப்பி போடுவதற்குள் ரன் அவுட் செய்யப்பட்டார் .அவரது விக்கெட் இந்திய அணிக்கு திருப்புமுனை என்று கண்டிப்பாக சொல்லி ஆகவேண்டும் .
80வது ஓவருக்கு பிறகு எடுக்கப்பட்ட புதிய பந்தில் ரஹானேஎ ல்பிடபிள்யூ செய்யப்பட்டார்.டிஆர்எஸ் தொழில் நுட்பத்தின் படி அப்பில் செய்தும் எந்த ஒரு பலனும் இல்லை. அடுத்ததாக வந்த விஹாரியும் தாக்குப் பிடிக்கவில்லை.இதனால் கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பிடியில் இந்தியா சிக்கியது.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது.அஸ்வின் 15 ரன்னுடனும் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 2 விக்கெட்டும், கம்மின்ஸ், ஹேசில்வுட், மற்றும் நாதன் லயன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். மொத்தம் 21 ஓவர்களை மெய்டன் ஓவராக வீசி மிரட்டியுள்ளனர்
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி காலை ஒன்பது முப்பது மணிக்கு தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய வீரர் புஜாரா கூறியபோது ‘’ஒரு கட்டத்தில் நாங்கள் நல்ல நிலையில் இருந்து கொண்டிருந்தோம் விராட் கோலி, ரஹானே ஆகியோரின் விக்கெட் சரிந்ததால் ஆஸ்திரேலியாவின் கை ஓங்க தொடங்கியது ஆனாலும் இந்த டெஸ்ட்டை பொருத்தவரை தற்போது இரு அணியும் சரிசமமான அமைப்பில்தான் இருப்பதாக நான் நினைக்கிறேன். அஸ்வினும் விருத்திமான் சஹா தொடர்ந்து பேட்டிங் செய்ய உள்ளனர். பின்வரிசை வீரர்களை கணிசமான பங்களிப்பை அளித்து வருவதால் 175 முதல் 200 ரன்கள் வரை எங்களால் தொட முடியும். பின்வரிசை வீரர்களை மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 350 ரன்களை கூட தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
அதிக விக்கெட் கைவசம் இருப்பதால் புதிய பந்து எடுக்கும்போது கூட போதுமான ரன்களை சேர்க்க முடியும் என்று எனக்கு தோன்றுகிறது. பந்தை அடித்து ஆடும் போது விக்கெட்டை இழக்காமல் பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். எனவே முதல் இரு பகுதிகளில் நாங்கள் பேட் செய்த விதத்தை நினைத்து நான் வருத்தப்படவில்லை என்று புஜரா பேட்டியில் கூறியுள்ளார்