இந்திய சினிமாவே தற்போது எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் கேஜிஎப் சாப்டர் 2. அனைவரும் கன்னட சினிமாவை ஏளனமாக பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அதிரடியாக உருவாக்கி இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம்தான் கேஜிஎப்.
காட்சிக்கு காட்சி அதிரடி மற்றும் விருவிருப்பு கலந்து மிரட்டி இருந்தார் இயக்குனர் பிரசாந்த் நீல்.அதுமட்டுமில்லாமல் கன்னட நடிகர் யாஷ்க்கு கேஜிஎப் படத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்கள் உருவானது. கேஜிஎப் சாப்டர் ஒன் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தாறுமாறாக உருவாகி உள்ளது.

மேலும் கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார்.இந்த நேரம் படத்தின் வெற்றியை கொண்டாடி இருக்க வேண்டியது ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் படம் வருகிற 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் அடைந்துள்ளனர். இருந்தாலும் அவர்களுக்கு சந்தோஷம் தரும் விதமாக இப்போது கேஜிஎப் 2 படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதனை மிரட்டலான போஸ்டர் மூலம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தில் நடித்த ஹீரோ யாஷ்யைவிட இந்திய அளவில் பிரபலமாது அவரது கையில் வைத்திருக்கும் சுத்தியல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை தமிழ்நாட்டில் நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை வெளியிட்டது. இந்த படத்தின் மூலம் விஷால் பல மடங்கு லாபம் சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்ததாக கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதற்கான உரிமையை யார் யார் வாங்கப் போகிறார்கள் என்ற கேள்வி தற்போது நிலவி வருகின்றது. கேரளாவில் கே ஜி எஃப் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதற்கான உரிமையை பிரபல நடிகரான பிரித்திவிராஜ் கைப்பற்றியுள்ளார். ஆனால் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதற்கு தமிழ்நாட்டில் யார் வரப்போகிறார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது இன்னும் ஒருசில தினங்களில் யார் வெளியிடுவார் என்கிற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது