37 வயதான பாலிவுட் நடிகை கத்ரினா கைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது தாயாரின் தொண்டு நிறுவனம் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை குழந்தைகளுக்காக மதுரையில் ’மவுன்டன் வியூ’ என்ற பள்ளிக் கூடத்தை நடத்தி வருகிறது. சும்மர் 200 குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளி ஏழை குழந்தைகளுக்கு தரமான ஆங்கில வழி கல்வியை வழங்கி வருகிறது. அந்த பள்ளியில் தற்போது 4 ஆம் வகுப்பு வரை உள்ளதாகவும் மேலும் 14 வகுப்பறைகள் கட்டவேண்டியுள்ளதால் உங்களால் முடிந்த பொருளுதவியை கொடுத்து உதவும்படி தனது பதிவு மூலம் கத்ரினா கைப் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீங்கள் கொடுக்கும் பொருளதவியால் இன்னும் அதிக எண்ணிக்கையிலான ஏழை குழந்தைகள் அவர்களது கனவுகளை நனவாக்கி கொள்வார்கள். கரோனா காரணமாக நாம் அனைவரும் மிக கடினமான சூழலில் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து உதவ வேண்டியது மிகவும் முக்கியமானது என்றும் கத்ரினா கைப் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.