மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் காலில்.ஆப்பரேஷன் செய்வதற்காக கடந்த 18-ம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவருக்கு நல்ல படியாக ஆப்பரேஷன் நடந்ததாக அவரது மகள்கள் சுருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் அறிவித்தனர். இந்த நிலையில் கமல்ஹாசன் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் சென்ற அவர் சில நாட்கள் ஒய்வில் இருக்க உள்ளார். கமல் பின்னர் இணையதளம் வாயிலாக மக்களிடமும் கட்சி நிர்வாகிகளுடனும் பேச உள்ளார்.

இதையடுத்து கட்சி பணிகளை ஆரம்பிக்க உள்ள கமல் அடுத்தகட்ட பிரசாரத்திற்கான திட்டங்கள் மற்றும் கூட்டணி பேச்சை துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் கமல் ஹாசன் பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று. இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.