மக்கள் நீதிமய்யத் தலைவர் கமலஹாசன் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கமல் மக்கள் நீதி மய்யத்திற்காக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில் கமல் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் கமல் இன்று செய்யாறு பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர், ‘’டீக்கடை நடத்தியவரிடம் இவ்வளவு பணம் ஏது? ஓ.பி.எஸ் வருமான வரி செலுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய முடியுமா? ‘’ என்று கேள்வி எழுப்பினார். ஓ.பி.எஸை மனதில் வைத்து, கமலஹாசன் இப்படிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.