மற்ற அரசியல் கட்சிகளை முந்திக்கொண்டு தேர்தல் களத்தில் இருக்கிற்சார் நடிகர் கமல். அவரது மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக மேற்கொண்டுவருகிறார். முதல்கட்டமாக மற்ற கட்சிகள் இன்னும் களத்துக்கு வராதநிலையில் கமல் தென்மாவட்டங்களில் மிகத்தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகிறார்.

இந்த மேடைகளில் ஆளும் அதிமுகவை வெளுத்துவாங்குகிறார் கமல். அதிகாரிகள் ஊழல் செய்து லஞ்ச ஒழிப்பு வழக்கில் கைது ஆவது குறித்து கமல் தமிழக அரசை விமர்சித்துப் பேசினார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே டென்சன் ஆகி பதில் சொன்னார். பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துபவருக்கு என்ன தெரியும்? என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம் ஆனார். இதனைத் தொடர்ந்து கமல் முதல்வரே பிக்பாஸ் பார்ப்பதில் மகிழ்ச்சி என சொன்னார். இன்றுவிடாப்பிடியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிம் நானோ, அமைச்சர்களோ பிக்பாஸ் பார்ப்பது இல்லை எனச் சொன்னார். மேலும் கமல் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துவதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் எம்.ஜி.ஆர் அதிமுகவுக்கு மட்டுமே சொந்தம் எனவும் சொன்னார்.

தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை செய்துவரும் கமல் ஜெயலலிதாவின் பிரச்சார யுத்தியை கையில் எடுத்துள்ளார். அதாவது மேடயில் கமல் ஒருவருக்கு மட்டும் தான் சேர் போடப்படுகிறது. மற்றவர்கள் நின்றுகொண்டே இருக்கிறார்கள். அதிமுகவில் ஜெயலலிதா தேர்தல் பிரச்சார மேடைகளின் போது அவர் மட்டுமே இருப்பார். அவர் பேசி நிகழ்ச்சி முடியும்வரை கூப்பிய கரத்தோடு வேட்பாளர் இருப்பார். ஜெயலலிதா ஆளுமைமிக்க தலைவியாக தன்னை நிரூபித்து பல தேர்தல் வெற்றிகளை பெற்ற பின்னர் தான் அப்படி செய்தார். கமல் கட்சிக்கு இன்னும் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத நிலையில் முழு மேடை…தனி சேர்…நிர்வாகிகள் பின்னால் நிற்பது என்பது உலகநாயகனுக்கே நியாயமா?