கமல்ஹாசன் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வரும் காருக்கு 2022 வரை இன்சூரன்ஸ் உள்ளதாக ஆதாரத்துடன் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலின் காருக்கு இன்சூரன்ஸ் முடிந்தும் விதியை மீறி பயன்படுத்தி வருவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில் விளக்கம் கொடுத்துள்ளார் நம்மவர் கமல்ஹாசன்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கிறது. அதில் மூன்று கட்டமாக பிரச்சாரம் செய்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்
தொடர்ந்து
காரில் பிரச்சாரம் செய்து வரும் கமல்ஹாசன் தனது காருக்கான இன்சூரன்ஸை இன்னும் கட்டவில்லை என ஒரு தகவல் வெளியானது. இதுதொடர்பான ஸ்கீரின் ஷாட்டை எடுத்து ட்விட்டரில் வைரலாக்கினர்.
தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த கமலிடம், இன்சூரன்ஸ் முடிந்த காரில் ஏன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறீர்கள்..? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தற்போது கமல்ஹாசன் தரப்பில் இருந்து ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 2022 வரை கார் இன்சூரன்ஸ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.