ஒரு லட்சம் பேர் நிரந்தரமாக வாழுகின்ற நாடாக கைலாசா 5 முதல் 10 ஆண்டுகளில் மாற்றம் அடையும் என புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் நித்யானந்தா பேசியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்கள் நடத்திவந்த சாமியார் நித்யானந்தா. இவர்மீது கடத்தல், பாலியல் வழக்குகள் உள்பட பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவர் திடீரென இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஜூட் விட்டார். பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் அவர் கடல் மார்க்கமாக நேபாளம் வழியாக நேக்கா தப்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் நித்தியை
சர்வதேச போலீசார் உலகம் முழுவதும் தேடி வருகின்றனர். இதற்கிடையே நித்யானந்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அதில் கைலாசா என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கி உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய அவர் அந்நாட்டில் குடியேற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்தது உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில் கைலாசா நாட்டுக்குவர விரும்புபவர்கள் ஆஸ்திரேலியா நாட்டுக்கு வரவும் என்றும் அங்கிருந்து கைலாசா நாட்டுக்கு சொந்தமான தனி விமானங்கள் மூலம் கைலாசா தீவுக்கு அழைத்து வரப்படுவீர்கள் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அடுத்த பத்துஆண்டுகளில் கைலாசாவில் ஒருலட்சம் பேர் நிரந்தரமாக குடியேறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.