ஜோஜாபா எண்ணெய் ஈரப்பதம் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் காரணமாக தோல் பராமரிப்பு பொருள்களில் மிக முக்கியமானது. முகப்பரு சிகிச்சையில் பொதுவான மூலப்பொருள் ஆகும் இந்த ஜோஜோபா எண்ணெய் சருமத்துக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.ஜோஜோபா எண்ணெய் ஜோஜோபா விதைகளின் திரவப் பிரித்தெடுத்தல் மற்றும் லோஷன்கள், மாய்சுரைசர்கள், லிப் பாம் கள், க்ளென்சர்கள் மற்றும் ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றில் கெரியர் எண்ணெயாக பயன்படுத்தப்படுகிறது.
இது மெழுகு பொருள் போன்று இருக்கும். தெளிவாகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ இவை தோன்றலாம். இதன் வாசனை நட்டு சுவையுடன் இருக்கலாம். இதன் நிலைத்தன்மை மனித தோலில் உள்ள இயற்கை எண்ணெய்களில் சீபத்தை ஒத்தது.
சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிப்பதன் மூலம், தொற்றுநோயிலிருந்து சருமத்தை பாதுகாப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை ஒட்டு மொத்தமாக சிறப்பாக வைத்திருக்கிறது.
இது பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்தது.ஜோஜோபா எண்ணெயை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை உங்கள் சருமத்தில் வைத்து பரிசோதிக்கவும். ஏனெனில் இது hypoallergenic அரிதான சந்தர்ப்பங்களில் அரிப்பு மற்றும் சொறி போன்ற பக்கவிளைவுகளை உண்டு செய்யலாம்.
இதை பயன்படுத்துவதற்கு முன்பு சருமத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எண்ணெயை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் அது ஒவ்வாமையை உண்டு செய்யுமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
ஜோஜோபா எண்ணெய் வாங்கும் போது அது குளிர் அழுத்தப்பட்ட cold-pressed jojoba oil எண்ணெயாக பயன்படுத்தவும். சுத்திகரிக்கப்படாத ஆர்கானிக் ஜோஜோபா எண்ணெயா என்பதை உறுதிபடுத்திகொள்ளுங்கள். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட எண்ணெயில் சருமத்தை எரிச்சலூட்டும் சேர்க்கைகள் இருக்கலாம். இது பார்க்க தங்க நிறத்தில் இருக்கும்.