ஜான்விக் 4 ஹாலிவுட் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.13,700 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஹாலிவுட் திரையுலகில் புகப்பெற்ற திரைப்படங்களில் ஒன்று ஜான் விக். கடந்த 2014ஆம் ஆண்டு கியானு ரீவ்ஸ் (Keanu Reeves) நடிப்பில் இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. மிகப்பெரிய வெற்றிகரமான முதல் மூன்று பாகங்களைத் தொடர்ந்து 4 வது பாகம் கடந்த 24ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் வெளிவந்து இரண்டு நாட்களில் இதுவரை உலகளவில் ரூ.617 கோடிக்கும் மேல் ஜான் விக் 4 திரைப்படம் வசூல் செய்துள்ளதாம். மேலும் இந்தியாவில் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்நிலையில் ஜான்விக்4 புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. முதல்வார பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உலக அளவில் ரூ.13, 700 கோடி ($137.5 மில்லியன்) வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை உள்ள அனைத்து சாதனைகளையும் இப்படம் முறியடித்துள்ளது. இதற்கு முன் வெளிவந்த ஜான் விக் மூன்று பாகங்களின் வசூலை ஜான் விக் 4 முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.