ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளை இலவசமாக வழங்குவதாக மீண்டும் ஒருமுறை அறிவித்து இருக்கிறது இதனை ஜியோ வாசிகள் கொண்டாடி வருகின்றனர்.
ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் மற்ற நெட்வொர்க் எண்களுக்கான வாய்ஸ் கால் சேவையை ஜியோ இலவசமாக வழங்குவது குறிப்படத்தக்கது. முன்னதாக ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால்களுக்கு கட்டணமானது நிமிடத்திற்கு 6 பைசா என வசூல் செய்தனர்.
டிராய் தனது புது முறைப்படி ரிலையன்ஸ் ஜியோ மற்ற டெலிகாம் நிறுவனங்களை போன்று அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் இலவச வாய்ஸ் கால் சேவையை வழங்க முடியும். இதனால் தற்போது ஏர்டெல் மற்றும் வி போன்ற நிறுவனங்கள் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளன.