சென்னையில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார் அமைச்சர் ஜெயக்குமார். தொடந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ‘’அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றிபெறுவோம். அதிமுக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என் ஏற்கனவே அறிவித்துவிட்டோம். இதையேற்கும் கட்சிகள்தான் எங்கள் கூட்டணியில் இடம்பெறும். தேர்தல்தேதி அறிவிப்புக்குப் பின்னர் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அதிமுக பொதுக்கூட்டத்தால் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.’’என்று தெரிவித்தார்.