நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம்ரவி நடித்துள்ள திரைப்படம் தான் பூமி .இசையமைப்பாளர் இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். கடந்த மே 1ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் , பொன்மகள்வந்தாள், போன்ற திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதேபோல் ஜெயம்ரவியின் பூமி திரைப்படமும் ஓடிடியில் வெளியாகின்றது. தற்போது இணையத்தில் இந்த டிரைலர் வைரல்ஆகி வருகின்றது.