சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்புவிழா வரும் 27 ஆம் தேதி காலை 11 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்க உள்ளார். சட்டசபை தலைவர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.கவின் கூட்டணி கட்சியான பா.ஜ.க-வின் மத்திய அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடம் என்பதால் மத்திய அமைச்சர்களும், பா.ஜ.க நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் கல்ந்துகொள்ளாமல் புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.