தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை ஒட்டி அதுரடி அறிவுப்புகளை தினமும் வெளியிட்டு வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதிலும் நீண்டகாலமாக இருந்துவரும் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்று சட்டசபையில் 110 விதிகளின் கீழ் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விவசாய கடன்களை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்த சமயத்தில் நடந்த போராட்டத்தின் முடிவில் வன்முறை ஏற்பட்டது. அதில் பலர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை இருந்துவந்தது.
இந்த நிலையில் இன்று சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் கூறுகையில், “ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும். அதே சமயம் விரும்பத்தகாத நிகழ்வுகளான காவல் துறையினரை தாக்கிய வழக்குகளை தவிர்த்த பிற வழக்குகள் வாபஸ் பெறப்படும்” என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.