மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். கரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
![](https://agamtamil.com/wp-content/uploads/2020/12/jallikattu-2.jpg)
ஜல்லிக் கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக முதலில் பாலகுருநாதர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று கோயில் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் போட்டி காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படுகிறது. அதனை வீரர்கள் அடக்கி வருகின்றனர். போட்டியில் பங்கேற்க 788 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்துள்ள 430 மாடு பிடி வீரர்கள் களம்கண்டு வருகின்றனர். முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு கரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டது. கரோனா இல்லாத மாடுபிடிவீரர்கள் மட்டுமே மைதானத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.