கார்களின் ராஜா என அழைக்கப்படும் கருஞ்சிறுத்தை இன் வடிவத்தை தனது லோகோவாக கொண்டு உலகத்தையே கவர்ந்த ஜாக்குவார் நிறுவனம் தனது முதல் பேட்டரி கார் மூலம் இந்தியாவில் கால் பதித்து இருக்கிறது.
ஜாகுவார் நிறுவனத்தின் ஐ-பேஸ் எலக்ட்ரிக் கார் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளது. இருப்பினும் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய எலக்ட்ரிக் மாடல்களை நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. பேட்டரி கார்களின் சந்தை இந்தியாவில் தொடங்கியதில் இருந்தே பல நிறுவனங்கள் போட்டி போட்டு தங்களின் காரை அறிமுகப்படுத்திக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.