பலாப்பழம் உடலில் சர்க்கரை அளவை பாதிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன்பு அது குறித்து நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். பலாப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் என்ன, இரத்த சர்க்கரை அளவை எப்படி பாதிக்கிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்ல தேர்வா என்பதை சற்று சுருக்கமாக பார்க்கலாம்.கலோரிகள் -143
கொழுப்பு-1 கிராம்
புரதம் -3 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள் -35 கிராம்
நார்ச்சத்து -2 கிராம்
வைட்டமின் பி6 – தினசரி மதிப்பில் 29%
வைட்டமின் சி -23% DV
வைட்டமின் பி6 மற்றும் ஆக்ஸிஜனேற்ற வைட்டமின் சி என சிறந்த மூலத்தை உள்ளடக்கியுள்ளது.இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் ஆற்றல் உற்பத்தி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி யில் முக்கியபங்கு வகிக்கிறது. மேலும் இதய நோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும் நாள்பட்ட அழற்சியை தடுக்க உதவும்,
பலாப்பழம் மேக்ரோ நியூட்ரியன்கள் அடிப்படையில் பெரும்பாலும் கார்போஹைட்ரேட்டுகளை கொண்டுள்ளது. இந்த கார்போஹைட்ரேட்டுகள் இயற்கையான சர்க்கரையின் வடிவத்தில் உள்ளன. அதனால் அவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. அதே நேரம் இதில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை சாதகமாக பாதிக்கலாம்.சர்க்கரை நோயாளிகள் பலாப்பழம் சாப்பிட விரும்பினால் அளவாக எடுத்துகொள்ள வேண்டும். எனினும் நார்ச்சத்து குறைவாகவும், கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகவும் இருப்பதால் இது இரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம். அரை கப் பலாப்பழம் 18 கிராம் கார்பொஹைட்ரேட்டுகளை வழங்கும். இது நடுத்தர GI அளவை கொண்டுள்ளது. அதிக GI உணவுகளுடன் ஒப்பிடும் போது இது இரத்த சர்க்க்ரை அளவை அதிகரிக்காது. மேலும் உடலில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும் ஆன் டி ஆக்ஸிடண்ட்களையும் கொண்டுள்ளது.பலாப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் எடுப்பதாக இருந்தால் மருத்துவரின் அறிவுரையுடன் மட்டுமே எடுக்க வேண்டும். இந்த கட்டுரையில் பலாப்பழத்தின் பொதுவான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.