இந்தியா ஐடி சேவை துறையில் பெரும் பகுதி வருவாய், வர்த்தகம் BFSI பிரிவில் இருந்து கிடைக்கும் நிலையில், வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகி வருவது மட்டும் அல்லாமல் பெரிய வங்கிகள் பணப்புழக்க பாதிப்பில் மாடிக்கொண்டு இருக்கும் நிலையில், திவாலாகாமல் தப்பித்தால் போதும் என நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வங்கிகள் வீழ்ச்சி மூலம் இந்திய ஐடி BPM நிறுவனங்களின் தற்போது கையில் இருக்கும் வர்த்தகத்தை இழப்பது மட்டும் அல்லாமல் அடுத்த சில வருடங்களுக்கு வங்கிகளின் டெக் சேவைகளுக்குக்கான செலவுகளும் குறையும் நிலை உருவாகியுள்ளது.
இந்திய ஐடி BPM நிறுவனங்களின் வர்த்தக பாதிப்பு தற்காலிகமானது மட்டும் நீண்ட கால பாதிப்பாகவும் மாறியுள்ளது. இதனால் இந்திய ஐடி BPM நிறுவனங்களில் பணிநீக்க அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவது, சம்பள உயர்வு ஆகிய அனைத்தும் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்திய ஐடி BPM துறையில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, LTIMindtree ஆகியவை அதிகப்படியான வர்த்தகத்தை அமெரிக்க சந்தையில் வைத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வங்கிகள் வீழ்ச்சி தொடர்ந்தாலோ அல்லது பாதிப்பு அதிகரித்தாலோ இந்திய ஐடி BPM துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் பாதிக்க துவங்க உள்ளது.
வட அமெரிக்க வங்கிகள் மட்டும் டெக் சேவைகளுக்காக 2022 ஆம் ஆண்டு மட்டும் 82 பில்லியன் டாலர் அளவிலான தொகையை செலவிட முடிவு செய்துள்ளது. இப்பிரிவில் உலகளாவிய முதலீட்டு தொகை 250 பில்லியன் டாலராகும். இந்திய ஐடி துறைக்கு BFSI முக்கியமான துறையாக விளங்கும் நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய வங்கி சூழ்நிலை நேரடியாக பாதிக்கும்