சென்னை மங்காடு பகுதியில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா பேசுகையில், “ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத முதல்தேர்தல் என்பதால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இருக்காது என்று கருத்துக்கணிப்பு வருகிறது. தேமுதிகவை பொறுத்தவரை கூட்டணியில் இருப்பதால் அமைதி காத்து வருகிறோம். விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
சசிகலாவால் அதிமுகவினர் பலர் ஆதாயம் பெற்றுள்ளனர். ஆனால் அவர் தற்போது வருவதை அதிமுகவினரே எதிர்க்கின்றனர். இது வருத்தமாக உள்ளது. ஒரு பெண் என்ற முறையில் அவரை நான் அரசியலுக்கு வரவேற்கிறேன். அவர் சிறையில் இருந்துவந்து மீண்டும் அரசியலில் ஈடுபட வேண்டும். ஜெயலலிதாவுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சசிகலா. அவர் அதிமுகவில் தனது பணியைத்தொடர வேண்டும்” என்றார்.