ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது துரித விற்பனையை அதிகப்படுத்த அசத்தல் திட்டம் ஒன்றை தீட்டியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன
2020 ஆண்டு இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனமானது தனது அசுர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 மாடல்கள் மொபைல் போன்கள் சாம்ராஜ்ஜியத்தில் அதிக பிரபலமாக இருந்ததோடு ஐபோன் XR போன்ற மாடல்களின் விலை குறைப்பு காரணமாக அதிகளவு விற்பனையாகியும் இருந்தது.
முன்னணி ஆய்வு நிறுவனமான இந்திய டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய தகவல்களின் படி அக்டோபர் மாதத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 51 ஆயிரம் விலை கொண்ட ஸ்மார்ட்போன்களின் விற்பனையானது பலமடங்கு அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுபோக ஐபோன் XR மற்றும் ஐபோன் 11 மாடல்களுக்கு அதிரடியாக விலை குறைப்பும் வழங்கப்பட்டது
குறிப்படத்தக்கது. மேலும் அக்டோபர் மாதத்தில் பிரீமியம் சந்தையில் 16 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது ஆப்பிள்

இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு ஐபோன் 11 மற்றும் 12 வெளியீடு, ஐபோன் எஸ்இ 2 வெளியீடு ஆகியவையும் முக்கியக் காரணமாக இருந்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன்களுக்கு அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு உள்ளிட்ட ஃப்பார்முலாககள் முக்கிய அங்கங்களாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் 2021 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் பிரியர்கள் மட்டுமல்லாது மிட்-பிரீமியம் வாடிக்கையாளர்களை குறிவைத்து புதுசலுகைகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது