ஆப்பிள் ஐ.ஒ.எஸ் தளமானது ஐபோன் பயன்படுத்துவோருக்கு ரிமைண்டர், நோட்ஸ் மற்றும் காலண்டர் என சில பொதுவான அம்சங்களை வழங்கி வந்தாலும். இது போன்ற அனைத்திற்கும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகப்படியான மூன்றாம் தரப்பு செயலிகள் எளிதாக கிடைக்கின்றன.
பெரும்பாலான ஐபோன் பயனர்கள் தங்களது மாடலில் உள்ள மறைக்கப்பட்டு இருக்கும் சில ரகசிய அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ள தவறிவிடுகின்றனர். அந்த வகையில் ஐபோன் கால்குலேட்டர் செயலியில் ஒரு மறைக்கப்பட்ட அம்சம் உள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதன்படி கால்குலேட்டர் செயலியில் அறிவியல் கால்குலேட்டர் மோட் மறைக்கப்பட்டு ரகசியமாக வழங்கப்படுகிறது. இருப்பினும் கால்குலேட்டர் செயலிக்கு சென்று பயனர்கள் இதனை ஆக்டிவேட் செய்ய வேண்டுமாம். பின்னர் இந்த சேவையை பெற ஐபோனில் கால்குலேட்டர் செயலியை திறந்ததும், போனினை கிடைமட்ட வடிவில் வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொழுது சாதாரண கால்குலேட்டர் செயலி அறிவியல் அம்சங்கள் நிறைந்த கால்குலேட்டராக மாறிவிடுமாம்……அடடே!