குழந்தைகளுக்கான முதலீடு என்பது அவர்களது நல்ல எதிர்காலத்தினை உருவாக்க உதவும் வழியாகும் இது உங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற நிதி தேவைகளை பூர்த்தி செய்ய இந்த சேவை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பெயரில் நீங்கள் போடும் இந்த இன்சூரன்ஸ் திட்டங்கள் உங்கள் குழந்தைகள் வளர்ந்து வரும்போது அவர்களின் செலவுக்கும், உங்களின் எதிர்காலத்துக்கும் கைகொடுக்கும்.
இப்படி சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என் பலரும் நினைப்பார்கள். ஆனால் எப்படி முதலீடு செய்வது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இன்சூரன்ஸ் திட்டங்களானது நமக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். இங்கே அப்படியான சில திட்டங்களைப் பார்ப்போம்.
அவிவா யங் ஸ்காலர்
அவிவா யங் ஸ்காலர் அட்வான்டேஜ் பிளான் (Aviva young scholar advantage plan) இந்த திட்டத்தில் நுழைவு வயது 21 – 45 வயதாகும். முதிர்வு வயது 60 வயதாகும். பிரீமியம் குறைந்தபட்சம் 50,000 ரூபாய் உங்கள் வருட பிரீமியத்தில் 10 மடங்கு முதிர்வு தொகையாக உங்களிடம் கிடைக்கும்.
பஜாஜ் அலையன்ஸ்
(Bajaj Allianz young assure) இந்த திட்டத்தில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இணைந்து பயன் பெறலாம் இந்த திட்டத்திலும் முதிர்வு காலம் 60 ஆகும். மேலும் இதில் உங்களது வருட பிரீமியத்தில் 10 மடங்கு முதிர்வு தொகையாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்டிஎஃப்சி எஸ்எல் யங் ஸ்டார் சூப்பர் பிரீமியம்
இந்த திட்டத்தின் நுழைய வயது வரம்பு 18 – 65 ஆகும். இந்த திட்டத்தின் முதிர்வு வயது 75 வயதாகும். இந்த திட்டத்தில் ஆண்டு பிரீமியம் குறைந்த பட்சம் 15,000 ரூபாய். க்ளைம் ஆனது உங்களது ஆண்டு பிரீமியத்தில் 10 மடங்காகும்.
பிர்லா சன் லைஃப்
இந்த பிர்லாவின் திட்டத்தில் நுழைய நுழைவு வயது 15 – 55 வயது வரையாகும்.மேலும் இந்த திட்டத்தின் முதிர்வு வயது 75 வயதாகும். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் வரையிலும் க்ளைம் செய்து கொள்ளலாம்.