இன்ஸ்டாகிராம் லைட் செயலி மீண்டும் வெளியாக இருக்கிறது என ஒரு தகவல் உலாவருகிறது.
பேஸ்புக் நிறுவனமானது தனது இன்ஸ்டாகிராம் லைட் செயலியை வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் பயனர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய பிரத்யேக இன்ஸ்டாகிராம் லைட் ஆப் ஆனது அளவில் 2MB-க்கும் குறைவாகவே இருப்பது மொபைலில் ஸ்டோரேஜ் இல்லை என்று சொல்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. அளவில் மிக சிறியதாக இருந்தாலும், செயலி சீராகவும் வேகமாகவும் இயங்கும் என பயனர்கள் கூறி வருகின்றனர். இந்த செயலி லோ-எண்ட் ஸ்மார்ட்போன்களை குறிவைத்து வெளியிடப்பட்டிருக்கிறது அதனால் இன்னும் கூடுதல் பயனர்கள் இன்ஸ்டாகிராமில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
இதுதவிர ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் தனது பேஸ்புக் லைட் செயலியை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. இதுவும் அளவில் சிறியதாகவே இருந்ததால் பெரியவர்களுக்கும் பேஸ்புக் போய் சேர்ந்துவிட்டது.

இந்தியாவில் உள்ள பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இதனை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம் என்றும் ஆங்கிலம் தவிர நமது நாட்டு மொழிகளான தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி ஆகிய மொழிகளும் இதில் இடம்பெற்றுள்ளது என்பது இந்தியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது.