ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் பெண் காவலராகப் பணிபுரிந்துவரும் உஷா என்பவர் காவல்துறை வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்ட ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
அந்த ஆடியோவில் பெண் காவலர் உஷா அப்படி என்ன பேசியிருக்கிறார் தெரியுமா ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காக தாங்க முடியாத அளவிற்கு எனக்கு வேலை கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் நான் பணி செய்ய முடியாத நிலைக்கு சென்று உள்ளேன். எனக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனது தாய்க்கு புற்று நோய் இருக்கின்றது. அவரை கவனித்து கொள்ள முடியாத நிலை இருக்கின்றது

இதனால் கடந்த ஒரு சிலவாரமாக விடுப்பில் சென்று மீண்டும் பணிக்கு வந்தேன். தற்போது இன்ஸ்பெக்டர் அதிக பணியை கொடுத்து வருகிறார். கொடுக்கும் பணியைச் செய்யமுடியவில்லை என்றால் டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு போ எனக் கூறுகிறார். எந்தத்தவறும் செய்யாமல் நான் ஏன் டிரான்ஸ்பர் செய்யப்பட வேண்டும். நான் தற்கொலை செய்து கொண்டால் தான் தீர்வு கிடைக்கும்போல் உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த ஆடியோ வெளியானதும் பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகரன் பெண் காவலர் உஷாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.மேலும் புகாரை சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல் என்னிடமே கூறியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார் இதனை அடுத்து அந்த பெண் போலீசுக்கு விடுப்பு வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது