வருகின்ற ஒன்றாம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவை தொடங்கபடுவதாக கூறப்படும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரயில்வே துறை அறிவித்திருப்பது போன்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் அது உண்மையில்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அரசின் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் கலந்து ஆலோசித்து அதன் பின்னரே வழக்கமான ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் சமூக வலைத்தளங்களில் வரும் உண்மையற்ற செய்திகளை யாரும் நம்பிவிட வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.