ரயில் பயணிகளின் நலன் கருதி படுக்கை வசதிகள் கொண்ட ரயில்களை லோயர் பெர்த் வடிவமைப்பில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாளுக்குநாள் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது பயணிகளின் வசதிக்கு ஏற்ப இந்திய ரயில் நிர்வாகம் போக்குவரத்து மற்றும் ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது. குறிப்பாக படுக்கை வசதி கொண்ட ரயில்களை அதிகமான பயணிகள் பயணம் செய்ய விரும்புவதால் தற்போது அதிகமான பயணிகள் பயணம் செய்யும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இதில் முன்பதிவு டிக்கட் ஆர்.ஏ.சி எனில் சைட் லோயர் பெர்த் உட்கார்ந்து பயணிப்பது போன்று இதனால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தால் உட்கார்ந்துதான் பயணிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.
இதனால் பயணிகள் நிம்மதியாக தூங்க முடியவில்லை அதன் காரணமாக ரயில் பயணத்தில் இது ஒரு பிரச்சனையாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக படுக்கை வசதி கொண்ட ரயில்களில் வடிவமைப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பாடுபட்டு வருவதாகவும், பயணிகளின் பயணத்தை வசதியாக மாற்றுவதற்காக இருக்கைகள் மாற்றம் செய்வதற்காக இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார் ரயில் பயணிகள் சந்தித்து வந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு இந்திய ரயில்வே நிரந்தரமாக ஒரு தீர்வை ஏற்படுத்தி உள்ளது இதனால் ரயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
அதேநேரம் லோயர் பெர்த்தில் என்னவகையான மாற்றம் வரப்போகிறது என இப்போதே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.