நம் நாட்டின் விமானப்படைக்கு வலுவூட்டும் படலத்தில் இறங்கியுள்ளது மத்திய பா.ஜ.க அரசு. ஏற்கனவே உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட 83 எல்.சி.ஏ தேஜஸ் விமானங்களை வாங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் 21 மிக்-29 ரக போர் விமானங்களையும், 12 சுஹோய்-30 எம்.கே.ஐ ரக போர் விமானங்களையும் ரஷ்யாவிடமிருந்து வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்திய விமான படையில் ஏற்கனவே 59 மிக்-29 ரக விமானங்கள் உள்ளன. ஏற்கனவே உள்ள 59 விமானங்களையும் நவீன படுத்தவும், புதிதாக 21 விமானங்களை வாங்கவும் மொத்தம் 7418 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது. ஏற்கனவே 272 சுஹோய்-30 எம்.கே.ஐ ரக விமானங்கள் இந்திய விமான படையிடம் உள்ளன. இந்த நிலையில் 12 புதிய விமானங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வாங்க 10730 கோடி ரூபாய் செலவு செய்யப்பட உள்ளது.