இசைஞானி இளையராஜ இனிய இசையால் இதயங்களை இளகச் செய்தவர். இசை ஞானிக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. இளையராஜா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் 40 ஆண்டுக்கும் மேல் தங்கி இருந்தார். பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் இளையராஜாவுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இளையராஜாவுக்கு அவமதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், அதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை எனவும். எனவே இளையராஜா வாங்கிய அரசு விருதுகளை திருப்பி தர போகிறார் என இசை கலைஞர்கள் சங்க தலைவர் தீனா கூறியிருந்தார்.
இருவருக்கு இடையேயான சிவில் பிரச்னையில் அரசு எப்படி தலையிட முடியும் என நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். இதுபற்றி இளையராஜாவின் நலம் விரும்பிகள் அவரிடம் எடுத்துக்கூறியுள்ளனர். இதையடுத்து அரசு விருதுகளை ஒப்படைக்கும் முடிவில் இருந்து இளையராஜா பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.