மஹாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீயில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கடந்த 9-ம் தேதி நடந்தது.
இது சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதில் குழந்தைகள் விவகாரத்தில் இழப்பீடாக பணம் வழங்குவது மட்டும் போதாது என்றும். கவனக்குறைவு மற்றும் அலட்சியத்துடன் பணியாற்றியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மஹாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது