ரித்திக் ரோஷனுக்கு ஸ்கோலியோசிஸ் என்கிற நோய் உள்ளது. மனிதனின் முதுகுத்தண்டு வளைவு மற்றும் தோள்பட்டை ஒரு பக்கம் சாய்வதற்கு இந்த நோய் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும்.
பாலிவுட்டில் மிக அழகான மற்றும் திறமையான நடிகர்களில் ஒருவர் தான் ரித்திக் ரோஷன். இவர் உடல் கட்டமைப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக காரணமாக இருந்தது. ரித்திக் ரோஷன் சிறுவயதிலிருந்தே படத்தில் பணியாற்றி வருகிறார். பள்ளி பருவ காலத்தில் ரித்திக் ரோஷன் சரளமாக பேச முடியாமல் திக்கித் திக்கிப் பேசுவார். அதுமட்டுமில்லாமல் இவரது கையில் ஆறு விரல்கள் இருக்கும் . அதனால் அவரது நண்பர்கள் ரித்திக் ரோஷனை கேலி மற்றும் கிண்டல் செய்து வந்துள்ளனர். என்னதான் கேலி கிண்டல் செய்தாலும் அதற்கு ஒரு காலத்தில் பின்னால் சரளமாக பேச முடியும் என நினைத்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் .அதன் விளைவாக அவர் நடிக்கும் படங்களில் அடுக்கடுக்கான வசனங்கள் சரளமாக பேசி இப்போது திரையில் வந்தாலே கைத்தட்டலும் விசிலும் பறக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் .

இதற்காக அவர் எந்த அளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்பது நாம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.நடிகர் ரித்திக் ரோஷனுக்கு ஸ்கோலியோசிஸ் நோய் உள்ளது இந்த நோய் மனிதனின் முதுகுத் தண்டுவடம் மற்றும் தோள்பட்டை ஒரு பக்கமாக சாய்வதற்கு முக்கிய பங்கு வகிக்கும். இதனால் மருத்துவர்கள் இனிமேல் உங்களால் நடக்கவோ, நடனம் ஆடவோ முடியாது என்று கூறிஉள்ளனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நடிகர் ரித்திக் ரோஷன் என்னால் நடக்க முடியும் அது மட்டுமில்லாமல் நடனம் ஆட முடியும் என்று கூறி படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். நடனம் ஆடி உள்ளார்நடிகர் ரித்திக் ரோஷன். அவருடைய முதுகுத்தண்டை நேர் செய்வதற்காக பல மருத்துவரிடமிருந்து ஆலோசனை பெற்று தற்போது உடற்பயிற்சி செய்து வருகின்றார்.
என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் ரித்திக் ரோஷன் ஒரே பொசிஷனில் ஒரே இடத்தில் இருப்பது நிமிடத்திற்கு மேல் உட்கார முடியாது. அதான் ரித்திக் ரோஷன் ஆறு விதமான போசிஷன்களில் உட்கார ஆறு விதமான கார்களை வடிவமைத்து உள்ளார். ரித்திக் ரோஷன் தொலை தூரம் காரில் பயணம் செல்வதற்காக இருந்தால் அவருக்கு பின்னால் ஆறு கார்கள் பின் தொடர்ந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு காரில் இருந்து மற்றொரு காரில் சென்று உட்கார்ந்து கொள்வார்.அந்த அளவிற்கு இந்த நோயில் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர்கள் ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ, போன்ற பல கார்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.