பெரும்பாலானோர் காலையில் எழுந்ததும் உடல் புத்துணர்ச்சிக்காக குடிக்கும் பானமாக தோன்றிய காபி தற்போது அடிமயாகுதல் வரை சென்றுவிட்டது என்று சொன்னால் மிகை ஆகாது. சிலருக்கு தினசரி நான்கைந்து காபி குடித்தால் தான் வேலை ஓடும். இன்னும் சொல்லப்போனால் காபி குடித்தால் தான் காலைக்கடனே வரும் என சொல்லும் நண்பர்களும் பலரைப் பார்த்திருக்கிறோம்.
இந்த காபியில் பல வகைப்பட்ட வெரைட்டிகள் இருக்கின்றன அதிலும் கொரோனா கோர தாண்டவம் ஆடிய லாக்டவுன் காலத்தில் மக்களிடையே காபியில் தனித்துவமான டல்கோனா காபி மிகவும் பிரபலமானது. இதனால் டல்கோனா காபியின் மீதான ஆசை அதிகரித்து, பலருக்கும் இந்த காபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டுள்ளது. அந்த ஆவலே இந்த பதிவை உருவாக்கியது. ஆம். இந்தப்பதிவில் டல்கோனா காபி எப்படிச் செய்வது என விளக்கியுள்ளோம்.
டல்கோனா காபியின் எளிய செய்முறையானது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து பாருங்கள்.
டல்கோனா காபி செய்ய என்னவெல்லாம் தேவை?
காபி பவுடர் – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
சுடுநீர் – 1 டீஸ்பூன்
பால் – 2 கப்
செய்யும் முறை
முதலில் ஒரு பௌலில் காபி பவுடரைப் போட்டு கொள்ள வேண்டும். பின் அதில் சர்க்கரையைப் போட்டு, சுடுநீரை ஊற்றி, ஒரு ஸ்பூன் கொண்டு ஒருமுறை கிளறி விட வேண்டும். இப்போது கலவையின் நிறம் அடர் ப்ரௌன் நிறத்தில் இருக்கும்.
பின்பு ஒரே வேகத்தில் 10-15 நிமிடம் தொடர்ச்சியாக கலக்க வேண்டும். அப்படி தொடர்ந்து கலக்கும்போது கலவையின் நிறமானது மாறி ஒருவித ஐஸ்கிரீம் க்ரீம் போல காணப்படும். இப்போது நம் கையில் இருப்பதின் பெயர் தான் டல்கோனா கலவை. பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
பின்னர் ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் டல்கோனா கலவையைப் போட்டு, அதில் ஒரு கப் சூடான பாலை ஊற்றிவிட்டு நன்கு கிளற வேண்டும். இறுதியில் அதில் ஒரு ஸ்பூன் டல்கோனா கலவையைப் போடுங்கள் அவ்வளவு தான் டல்கோனா காபி தயார்!
உடனே அக்கம் பக்கத்து வீட்டாரை யெல்லாம் அழைத்து நான் டலகோணா காப்பி செய்து விட்டேன் என பெருமிதம் கொள்ளுங்கள்…பெருமையை விடுங்க குடிச்சுப் பாருங்க அதோட அருமை தெரியும்.