சுட, சுட தண்ணீர் குடிக்கும் பழக்கம் கேரளத்தினருக்கு அதிகமாக உண்டு. அவர்களின் அழகு பிளஸ் ஆரோக்கிய ரகசியமே அதுதான். இந்தப் பதிவில் சுட, சுட தண்ணீர் குடிப்பதால் என்னவெல்லாம் நன்மை எனப் பார்க்கலாம்.
வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராகும். அது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள அனைத்து கொழுப்புகளும் குறைந்துவிடும். தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல் பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்துவந்தால் உடம்பில் உள்ள வேண்டாத அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படும்.

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள் அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி குறைய வாய்ப்புள்ளது உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான்.
மதிய நேரம் சாப்பாட்டிற்குப் பின் வெந்நீர் பருகி வந்தால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் உடையது. காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் மலம் எளிதாக வந்துவிடும்.
கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும் அந்த வெந்நீரில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி இருந்தால் குணமடைந்துவிடும்.பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை 15 நிமிடம் வைத்து எடுத்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகி விடும்
சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால் வாயுத் தொல்லை குணமாகிவிடும் அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத் தொல்லை வரவே வராது.
நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும் மிருதுவான சருமம் பெற வெந்நீரை அடிக்கடி குடித்து வரவேண்டும்.வெண்ணீரில் இவ்வளவு மகிமை இருப்பதால் அருந்தி பாருங்கள் அதன் மகிமையை நீங்களே அறிவீர்கள்.