தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் எழுத்தாளர் ஆ.மாதவன். கடந்த 2015 ஆம் ஆண்டு தனது இலக்கிய சுவடுகள் என்னும் திறனாய்வு நூலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்றார். நடத்துனராக தன் தந்தை பணிசெய்த காலத்திலேயே கேரளத்துக்கு குடியேறிவிட்ட ஆ.மாதவன், தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்.

நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு என பலதுறையிலும் இயங்கி வந்த ஆ.மாதவன் சாகித்ய அகாடமி விருதை தன் 82 வது வயதில் பெற்றார். இந்நிலையில் தன் 87 வது வயதில் உடல் சுகவீனத்தால் நேற்று ஆ.மாதவன் உயிர் இழந்தார். ஏற்கனவே தன் மனைவி, மகனை இழந்துவிட்ட ஆ.மாதவன் தன் மகள் கலைசெல்வி வீட்டில் வசித்து வந்த நிலையில் இறப்பு அவரைத் தழுவியது. அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. சாகித்ய அகாடமி விருதுவென்ற தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவனின் உடல் போலீஸ் அணிவகுப்பு மற்றும் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கேரளம் படைப்பாளிகளுக்கு கொடுக்கும் மரியாதை சிலிர்க்க வைத்துள்ளது.