இந்த ஆண்டில் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய விசயங்கள் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் என்றால் என்ன?
2020 ஆம் ஆண்டில் கூகுள் தேடல் பட்டியலில் கொரோனா வைரஸ் குறித்த கேள்விகள் தான் முதலிடத்தில் உள்ளன.

பினோட் என்றால் என்ன?
கூகுளில் ‘பினோட் என்றால் என்ன’ என்ற கேள்விக்கான பதிலை ஆயிரக்கணக்கானோர் தேடியுள்ளனர். பினோட் ஆகஸ்டு மாதத்தில் இணையத்தில் வைரலான ஒன்று.
பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன?
இந்த முறை கடுமையாக நோய்வாய்ப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு நம்பிக்கைக்குரிய விளைவுகளைக் காட்டுகிறது. எனவே, அதை அதிக அளவில் தேடியுள்ளனர்.
கோவிட்-19 என்றால் என்ன?
கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்வி ‘கோவிட்-19 என்றால் என்ன?’ என்பது தான். இது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) வழங்கிய மற்றொரு பெயரைத் தவிர வேறில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன?
இந்த சட்டம் 2019 இல் மோடி தலைமையிலான மத்தியஅரசு கொண்டுவந்த மிகவும் சர்ச்சைக்குரிய சட்டங்களில் ஒன்றாகும்.
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரிய கிரகணம் என்பது ஒரு வான நிகழ்வு ஆகும். இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும்போது, அதன் முழுமையான பாதையில் ஒரு தற்காலிக இருளை உருவாக்க வலலது.
ஹன்டா வைரஸ் என்றால் என்ன?
பொதுவாக வைரஸ் கொறித்துண்ணிகளான எலி போன்றவற்றிலிருந்து பரவுகிறது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது. இது ஒரு சுவாச நோயாகும். இது மனிதர்களில் சில சமயங்களில் மட்டுமே ஆபத்தானது. எனவே இதையும் தேடியுள்ளனர்.
நெப்போடிஸம் என்றால் என்ன?
நெப்போடிஸம் (Nepotism) என்பது வணிகம், அரசியல், சினிமா, விளையாட்டு, மதம் மற்றும் பிற நடவடிக்கைகள் உட்பட பல்வேறு துறைகளில் செல்வாக்குள்ள ஒருவரின் உறவினர்கள்/நண்பர்களுக்கு காட்டப்படும் சாதகவாதம். 2020 ல் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை காரணமாக நெப்போடிஸம் பற்றி விவாதம் இந்தியாவில் அதிகம் பேசப்பட்டது.