இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் சமீப காலமாக நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு நபர் எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் சவுதி அரேபியாவில் இருந்து சென்னை மாநிலத்திற்கு வந்திருக்கின்றார். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் சோதனைகளை நடத்தி வந்துள்ளனர். அப்போது இந்த நபரையும் அதிகாரிகள் சோதனை செய்து உள்ளனர்
மேலும் அவரது உடமைகளை சோதனை செய்து பார்த்தபோது அதில் அவர் வைத்திருந்த பேரிச்சபழம் பாக்கெட் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழத் தொடங்கி உள்ளது. இதனால் அவர்கள் அந்த பாக்கெட்டை பிரித்து பார்த்த போது இந்த பாக்கெட்டுக்குள் சுமார் 26 லட்சம் மதிப்பிலான 225 கிராம் தங்கம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அரேபியாவில் இருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்துள்ளனர் .மேலும் அவரிடம் அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.