தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,368-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.42,536-க்கு விற்கப்படுகிறது.
நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5296-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.21 அதிகரித்து ரூ.5317-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்து உள்ளது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.75-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.75.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.75,800-க்கு விற்பனையாகிறது.