முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கிறார். நான்கு ஆண்டு தண்டனை முடிந்து அவர் இந்த மாதம் 27-ம் தேதி விடுதலை ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா இன்று உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சென்னை அரும்பாக்கத்தில் கோகுல இந்திரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உதயநிதி ஸ்டாலின் சசிகலா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தைற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோகுல இந்திரா, “சசிகலா கட்சியின் தலைவராக இருந்தவர். அவர் எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றுவோம். ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர். சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்றார்.