தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் அதிமுக த.மா.கவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதுகுறித்து த.மா,கவின் ஜி.கே.வாசன் கூறும்போது, ‘தமாகவை பொறுத்தவரை அதிமுகவின் நம்பிக்கைக்குரிய கூட்டணியாக பாராளுமன்றத் தேர்தலில் இருந்தே இருந்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது.
நேற்று தேதிமுக தங்கள் நிலையை உறுதிபடுத்தியுள்ளனர். என்னைக் கேட்டால் தேமுதிக வெற்றிக் கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறது. அதற்கு வருத்தப்படுகிறேன். த.மா.கவுக்கு குறைவான தொகுதிகள் என யூகத்திலேயே பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது உறுதியான தகவல் இல்லை. அதிமுக, த.மா.க பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது. எந்த சிக்கலும் இல்லை. ‘என்றார்.