பொதுவாக மூலிகைகளின் வரிசையில் துளசி, இஞ்சி, சுக்கு போன்ற தெய்வீக குணம் கொண்ட பலதரப்பட்ட வகைகள் உள்ளன. அதில் முக்கியமானது தான் இஞ்சி.
ஜலதோஷம், சளி, இருமல் இதுபோன்ற நோய்களை கட்டுப் படுத்துகின்றது. இஞ்சி ரத்த ஓட்டத்தை அதிகரித்து சீராக்கும், சளி ,இருமல், ஜலதோஷம் ஆகியவற்றை இது எளிதில் குணப்படுத்தும். இப்பொழுது இந்த இஞ்சி சட்னி எப்படி செய்யலாம் என்று நாம் பார்க்கலாம்.
என்னென்ன பொருட்கள் தேவை:
இஞ்சி-அரை கப், கடலைப்பருப்பு- இரண்டு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்- ஐந்து, கருவேப்பிலை – தேவைக்கேற்ப, புளி – ஒரு கைப்பிடி அளவு, வெல்லம் – ஒரு தேக்கரண்டி, எண்ணெய் – தேவைக்கேற்ப, உப்பு -தேவைக்கேற்ப, கடுகு -தேவைக்கேறப
இஞ்சி சட்னி செய்முறை
இஞ்சியை முதலில் கழுவி தோல் நீக்கி சிறிது சிறிதாக வெட்டி நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு புளியை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின்னர் நறுக்கிய இஞ்சி துண்டுகளை வதக்கவும். பின்னர் அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு
அதே கடாயில் கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.
ஊறவைத்த புளியை சிறிதளவு நீரில் சேர்த்து கரையுங்கள்.
பின்னர் நறுக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்துக்கொண்டு அதோடு சிறிதளவு வெல்லமும் சேர்க்கவேண்டும். அதனோடு புளிக் கரைசலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.அதன் பின்னர் சட்னியை தாளிக்க எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். தற்போது உங்கள் கையில் இருப்பது தான் ஆரோக்கியமான இஞ்சி சட்னி. பிறகென்ன இதனை உண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழுங்கள். உங்கள் செரிமானத்தையும் இஞ்சி சீராக்கும்.