இ்ந்தியஅணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ தலைவருமான சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் கங்குலியை பரிசோதனை செய்ததில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளரால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். பல்வேறு பிரபலங்களும் கங்குலியின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.