புது தில்லி கிழக்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்பியான கவுதம் கம்பீர் ஒரு ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
கடந்த 2019 ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு எம்பி யான கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தனது தொகுதியில் உள்ள காந்தி நகர் என்ற இடத்தில் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் கவுதம் கம்பீர் அறக்கட்டளை ஒரு ரூபாய்க்கு உணவு வழங்குகிறது.
உணவின்றி வெறும் வயிற்றுடன் ஒருவரும் உறங்க செல்லக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம். இது போல புது தில்லியில் 5 அல்லது 6 சமையற் கூடங்கள் திறக்க உள்ளோம், என்று கம்பீர் தெரிவித்தார். இத்திட்டத்தின் படி ஒரு நாளைக்கு 500 பேருக்கு ஒரு ரூபாய்க்கு உணவு அளிக்கப்படும். கரோனா காரணமாக சமூக இடைவெளி விட வேண்டியுள்ளதால் 50 பேருக்கு மட்டும் தற்போது கேண்டீனில் ஒரு முறை உணவு அளிக்கப்பட உள்ளது.