கொரோனா நோய்த்தொற்றை தடுக்க கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருத்துவ துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் 16-ம் தேதி கொரோனா தடுப்பு ஊசி போடும் பணியை தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்று கோடி முன்களப் பணியாளர்களான சுகாதார பணியாளர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு மற்றும் கண்காணிப்பிற்காக கோ-வின் என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வலைத்களத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதர்காக 79 லட்சம் பேர் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர். கொரோனா தடுப்பூசி போடுவதற்காக 3.7 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் அரை மணிநேரம் அந்த மையத்திலேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவிட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.