உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணைத் தலைவர் ஜெங் யிக்சின் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அவசர பயன்பாட்டுக்காக தடுப்பூசியை பயன்படுத்தியதில், பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் மொத்தம் 30 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி போடப்படும். சீனாவின் அனைத்து பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். முடிந்தவரை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் உடல் தகுதிபடைத்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.